Skip to main content

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.

குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads

இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது.

கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. நேற்று காலை சுமார் 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த போதும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படாததால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியும், சிலர் குடைகளுடனும் பள்ளி, கல்லூரிகளுக்கு சிரமத்துடன் சென்றனர்.

மழையால் மாவட்டத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகள் செய்ய முடியாமல் சிரமமடைந்தனர்.
மேலும், அதிகளவில் குளிர்காற்று வீசுவதால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பலருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

விவசாயிகள், சிறு வியாபாரிகள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். விவசாயிகள் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வர முடியாமலும், பூக்களை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியாமலும் சிரமமடைந்தனர்.

குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
மேலும் விவரங்களுக்கு ➜ https://bit.ly/kushishoppingvideo

நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 21.2 மிமீ மழை பதிவாகியிருந்தது. இதேபோல் ராயக்கோட்டை-17 மிமீ., போச்சம்பள்ளி-13.8 மிமீ., பாரூர்-12 மிமீ., பெனுகொண்டாபுரம்-10.2 மிமீ., நெடுங்கல்-9 மிமீ., அஞ்செட்டி-5.4 மிமீ., சூளகிரி-5 மிமீ., தேன்கனிக்கோட்டை-3.6 மிமீ., கிருஷ்ணகிரி-3.6 மிமீ., ஓசூர்-2.2 மிமீ என மொத்தம் 103 மிமீ மழை பதிவாகியுள்ளது.



கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு 753 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 177 கனஅடியும், தென்பெண்ணை ஆற்றில் 705 கனஅடி தண்ணீர் என 882 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல்

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், 41 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 580 கனஅடி தண்ணீர், முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளியில் நிகழ்ந்த கிறிஸ்துமஸ் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் விழாவை கிறிஸ்துவ சமூக மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினர். கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பங்குத்தந்தை இசையாஸ் தலைமை வகித்தார். விளம்பர தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும் இந்த விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்துவ புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் அன்பு சமாதானத்தில் கிடைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றோர், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி தேவாலயங்கள், கிறிஸ்துவ மக்களின் வீடுகளில் இயேசு பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், தேன்...

25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தூர் தடுப்பணை ஓடையில் தண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது

சந்தூர் தடுப்பணை, கிருஷ்ணகிரி மாவட்டம் கனமழையால் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தூர் அருகேயுள்ள தடுப்பணை ஓடையில் தண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது. இதை யடுத்து, அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டு மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் இடைவிடாத கனமழை பெய்தது. மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. காட்டாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள தடுப்பணை ஓடையில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் MASTERS GROUP (NEET /JEE) ACADEMY, DHARMAPURI WhatsApp us for Admissions ➜ CLICK HERE பெருக்கெடுத்து ஓடியது. இங்கிருந்து கூச்சானூர் ஏரிக்கு செல்லும் தண்ணீர், அங்கிருந்து பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு செல்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு ஓடையில் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் பூக்கள் தூவியும், ஆடுகள் பலியிட்டும் வழிபட்டனர். மேலும், பாளேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடைக்கோடி ஏரியான கூச்சானூர் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வ...