கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தற்காக வேளாண்மை அலுவலர்கள் மருந்துகள் தெளிக்க ஆலோசனைகள் வழங்கி, மருந்துகள் தெளித்தும் பலன் அளிக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி வட்டாரத்தில், 4,100 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் நெல்லில் புகையான் தாக்குதல் அதிகரித்தது. மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.
விளம்பரம்
வாட்ஸ்அப் செய்ய ➜ இங்கே கிளிக் செய்யவும்
இதனால் மேலும் நெற்பயிர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து அகற்றிவிட்டோம். சில இடங்களில் தீயிட்டு அழித் தனர். புகையான் நோயால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Comments
Post a Comment