கிருஷ்ணகிரி:
மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை
கூட்டத்தில் ஓசூர்- சேலம் நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான மேலுமலை, குருபரப்பள்ளி மேம்பாலம், சிக்காரிமேடு, வெங்கடாபுரம், ஆவின் மேம்பாலம், திம்மாபுரம், ஒரப்பம், ஒப்பதவாடி, கண்ணன்டஅள்ளி, போச்சம்பள்ளி பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்கு அமைப்பது, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, மழை காலத்தில் ஏற்பட்ட சாலைகளை சீரமைப்பது, நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சாலைகளில் வேகத்தடை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் அனைத்து பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), தேன்மொழி (ஓசூர்), துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தாசில்தார்கள் மற்றும் போக்குவரத்து துறை, வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
FOR ADVERTISING HERE
✅ 𝗟𝗢𝗖𝗔𝗟𝗜𝗭𝗘™ 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗲𝗱𝗶𝗮 𝗔𝗱𝘃𝗲𝗿𝘁𝗶𝘀𝗶𝗻𝗴 𝗦𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝘀
✅ 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝘁 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁
✅ 𝗖𝗮𝗹𝗹 ✆ ➜ +91 9159193169
Comments
Post a Comment