கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் விழாவை கிறிஸ்துவ சமூக மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினர். கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பங்குத்தந்தை இசையாஸ் தலைமை வகித்தார். விளம்பர தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும் இந்த விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்துவ புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் அன்பு சமாதானத்தில் கிடைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றோர், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி தேவாலயங்கள், கிறிஸ்துவ மக்களின் வீடுகளில் இயேசு பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், தேன்...
கிருஷ்ணகிரி: மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. விளம்பரத் தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓசூர்- சேலம் நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான மேலுமலை, குருபரப்பள்ளி மேம்பாலம், சிக்காரிமேடு, வெங்கடாபுரம், ஆவின் மேம்பாலம், திம்மாபுரம், ஒரப்பம், ஒப்பதவாடி, கண்ணன்டஅள்ளி, போச்சம்பள்ளி பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்கு அமைப்பது, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, மழை காலத்தில் ஏற்பட்ட சாலைகளை சீரமைப்பது, நெடுஞ...