அண்மையில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியையும் பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது.
இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக பழுதடைந்த பள்ளி கட்டடங்களை கண்டறிந்து அதை இடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான கட்டிடங்களில் மாணவர்கள் அமர வைக்க வேண்டாம் என்றும், விடுமுறை நாட்களில் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி அறிவுறுத்தியிருந்தார்.
இதனைதொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்ட பகுதியில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட பழுதடைந்த 70 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு தனியார் பள்ளிகளில் உள்ள பழுது நிவர்த்தி செய்ய முடியாத அளவில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
☑️ FOR ADVERTISING HERE
✅ 𝗟𝗢𝗖𝗔𝗟𝗜𝗭𝗘™ 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗲𝗱𝗶𝗮 𝗔𝗱𝘃𝗲𝗿𝘁𝗶𝘀𝗶𝗻𝗴 𝗦𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝘀
✅ 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝘁 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁
ↆ ↆ ↆ 𝗖𝗟𝗜𝗖𝗞 𝗛𝗘𝗥𝗘 ↆ ↆ ↆ
➜https://bit.ly/localizewhatsapp
✅ 𝗖𝗮𝗹𝗹 ✆ ➜ +91 9159193169
Comments
Post a Comment