Skip to main content

கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளியில் நிகழ்ந்த கிறிஸ்துமஸ் திருவிழா


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் விழாவை கிறிஸ்துவ சமூக மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பங்குத்தந்தை இசையாஸ் தலைமை வகித்தார்.

விளம்பர தொடர்புக்கு

இந்த விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்துவ புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் அன்பு சமாதானத்தில் கிடைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றோர், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர்.


இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி தேவாலயங்கள், கிறிஸ்துவ மக்களின் வீடுகளில் இயேசு பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கந்திகுப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.


FOR ADVERTISING HERE,

✅ 𝗟𝗢𝗖𝗔𝗟𝗜𝗭𝗘™ 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗲𝗱𝗶𝗮 𝗔𝗱𝘃𝗲𝗿𝘁𝗶𝘀𝗶𝗻𝗴 𝗦𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝘀

✅ 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗖𝗵𝗮𝘁 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁

✅ 𝗖𝗮𝗹𝗹 ✆ ➜ +91 9159193169 

Comments

Popular posts from this blog

பழுதான பள்ளிக் கட்டிடங்கள் இடிப்பு

  அண்மையில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியையும் பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. FOR BOOKING YOUR ADVERTISEMENT  ➜  CLICK HERE இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக பழுதடைந்த பள்ளி கட்டடங்களை கண்டறிந்து அதை இடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான கட்டிடங்களில் மாணவர்கள் அமர வைக்க வேண்டாம் என்றும், விடுமுறை நாட்களில் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி அறிவுறுத்தியிருந்தார். இதனைதொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்ட பகுதியில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட பழுதடைந்த 70 பள்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு ச...