Skip to main content

தருமபுரி: நகைக்கடன் முறைகேடு தொடர்பாக கீழ்மொரப்பூர் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர், செயலர் உள்பட 4 பேர் கைது



தருமபுரி: நகைக்கடன் முறைகேடு தொடர்பாக கீழ்மொரப்பூர் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர், செயலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பார்த்திபன், செயலர் பொன்னுசாமி, எழுத்தர்கள் சிவலிங்கம், கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு சங்கத்தில் ரூ.43,31,472 முறைகேடு செய்ததாக துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைவர், செயலர் மற்றும் எழுத்தர் ஒருவரின் சொத்து ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஆர்டர் செய்ய

  தமிழ்நாட்டில் நகைக்கடன்கள் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகைக் கடன்கள் பெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

  போலி நகைகளை அடமானமாக வைத்து நகைக் கடன்களை பெற்றிருப்பதாகவும், நகைகளை அடமானம் பெறாமல், நகைகளை அடமானம் வைத்துள்ளதாக ஏமாற்றி நகைக்கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

ஆன்லைன் ஆர்டர் செய்ய

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் இதுதொடர்பாக முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடியின்போது நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமான நிலையில் நகைக்கடன் தள்ளுபடியிலும் அம்பலமாகியுள்ளது.

☑️ FOR ADVERTISING HERE, CONTACT US 👇
WhatsApp
➜ http://bit.ly/krishnagirimemesads 

Comments

Popular posts from this blog

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையான் நோய் தாக்குதலால் நெற்பயிரில் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தற்காக வேளாண்மை அலுவலர்கள் மருந்துகள் தெளிக்க ஆலோசனைகள் வழங்கி, மருந்துகள் தெளித்தும் பலன் அளிக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி வட்டாரத்தில், 4,100 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் நெல்லில் புகையான் தாக்குதல் அதிகரித்தது. மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. விளம்பரம் குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ இங்கே கிளிக் செய்யவும்  இதனால் மேலும் நெற்பயிர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து அகற்றிவிட்டோம். சில இடங்களில் தீயிட்டு அழித் தனர். புகையான் நோயால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு ச...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற உத்தரவு

கிருஷ்ணகிரி: மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. விளம்பரத் தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும்   கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓசூர்- சேலம் நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான மேலுமலை, குருபரப்பள்ளி மேம்பாலம், சிக்காரிமேடு, வெங்கடாபுரம், ஆவின் மேம்பாலம், திம்மாபுரம், ஒரப்பம், ஒப்பதவாடி, கண்ணன்டஅள்ளி, போச்சம்பள்ளி பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்கு அமைப்பது, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, மழை காலத்தில் ஏற்பட்ட சாலைகளை சீரமைப்பது, நெடுஞ...