கிருஷ்ணகிரி: `9 மாதங்களில் 728 சிறுமிகள் கர்ப்பம் - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்கள்!'
ஜனவரி 1-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 9 மாதங்களில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 23,347 பேர் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர்.
இதில், 728 பேர் 18 வயதுக்குட்பட்ட பதின்பருவச் சிறுமிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விளம்பரம்
வாட்ஸ்அப் ➜ https://bit.ly/kushishoppingworld
ஜனவரி மாதம்-58, பிப்ரவரி-66, மார்ச்-86, ஏப்ரல்-105, மே-101, ஜுன்-102, ஜூலை-96, ஆகஸ்ட்-76, செப்டம்பர் மாதம்-38 சிறுமிகளும் கருத்தரித்திருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருக்கும் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில்தான் அதிக அளவிலான சிறுமிகள் கருத்தரித்திருப்பதாகவும், ஆர்.டி.ஐ மூலம் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஒன்பது மாதங்களில், காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் 132 சிறுமிகள் கர்ப்பமடைந்திருக்கிறார்கள்.
ஓசூர் நகர்ப்புறத்தில் 41, ஓசூர் ஒன்றியப் பகுதியில் 28,
கிருஷ்ணகிரி நகர்ப்புறத்தில் 9, கிருஷ்ணகிரி ஒன்றியப் பகுதியில் 88 சிறுமிகள் கருத்தரித்திருக்கின்றனர்.
அதேபோல, தளி ஒன்றியத்தில்-30, ஊத்தங்கரை ஒன்றியத்தில்-73,
மத்தூர் ஒன்றியத்தில்-81, கெலமங்கலம் ஒன்றியத்தில்-75,
பர்கூர் ஒன்றியத்தில்-59,
சூளகிரி ஒன்றியத்தில்-79, வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் 33 சிறுமிகள் கருத்தரித்திருக்கிறார்கள்.
குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
மேலும் விவரங்களுக்கு
Comments
Post a Comment