கிருஷ்ணகிரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 171 வார்டுகளுக்கு 424 ஓட்டுச்சாவடிகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் வரைவு பட்டியல் தயார் நிலையில் உள்ளது.
கிருஷ்ணகிரி:
இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி அன்மையில் வெளியிட்டார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மொத்தம், 171 வார்டுகளுக்கு, 424 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடக்க உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 3 லட்சத்து, 57 ஆயிரத்து, 415 பேர் வாக்களிக்க உள்ளனர்.
குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
வாட்ஸ்அப் தொடர்புக்கு - இங்கே கிளிக் செய்யவும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஓட்டுச்சாவடி வரைவு பட்டியல்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலங்களிலும், ஒவ்வொரு வார்டிலும் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரால் விளம்பர படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், தேர்தல் தனி தாசில்தார் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் உடனிந்தனர்.
Comments
Post a Comment