கிருஷ்கிருஷ்ணகிரி மாவட்டம், மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணப்பா. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வந்தது.
விடியற்காலை வரை பெய்த கனமழையால் கிருஷ்ணப்பாவின் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணப்பாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
WhatsApp us For Admissions ➜ Click Here
Comments
Post a Comment