Skip to main content

Posts

Showing posts from November, 2021

தருமபுரி: நகைக்கடன் முறைகேடு தொடர்பாக கீழ்மொரப்பூர் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர், செயலர் உள்பட 4 பேர் கைது

தருமபுரி: நகைக்கடன் முறைகேடு தொடர்பாக கீழ்மொரப்பூர் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர், செயலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பார்த்திபன், செயலர் பொன்னுசாமி, எழுத்தர்கள் சிவலிங்கம், கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கத்தில் ரூ.43,31,472 முறைகேடு செய்ததாக துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைவர், செயலர் மற்றும் எழுத்தர் ஒருவரின் சொத்து ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ஆர்டர் செய்ய ➜ www.vangaannachi.com   தமிழ்நாட்டில் நகைக்கடன்கள் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகைக் கடன்கள் பெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.   போலி நகைகளை அடமானமாக வைத்து நகைக் கடன்களை பெற்றிருப்பதாகவும், நகைகளை அடமானம் பெறாமல், நகைகளை அடமானம் வைத்துள்ளதாக ஏமாற்றி நகைக்கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் ...

திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய். எல்லா ஊரு ஸ்பெஷல் ஐட்டங்களும் உங்கள் இல்லம் தேடி..

                    www.vangaannachi.com பொதுவாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உணவு வகை பிரபலமானதாக இருக்கும். அந்ந வகையில் தமிழகத்தில,  திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மனப்பாறை முருக்கு என ஒவ்வொரு ஊரிலும் ஒரு உணவு மிக நேற்த்தயாகவும் சுவையானதாகவும் தயாரிக்கப்பட்டு அந்த ஊரின் அடையாளமாகவே மாறிவிடும். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா Order Now ➜ www.vangaannachi.com   ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா & பால் அல்வா Order Now ➜ www.vangaannachi.com ஆனால், இந்த எல்லா உணவு வகைகளையும் வாங்கி சுவைக்க வேண்டுமென எண்ணும் வெளியூர் மக்களாகிய நாம் நேரடியாக சென்றோ, நமது நண்பர்கள் மூலமாகவோ தான் இந்த உணவுப் பொருட்களை வாங்கி உண்டு வந்தோம். இந்த நிலையை மாற்ற எண்ணிய நெல்லையைச் சேர்ந்த இளைஞரின் யோசனையில் உருவானது தான் " வாங்க அண்ணாச்சி.காம் " என்ற ஆன்லைன் உணவு பொருள் விற்பனை அங்காடி. இந்த வலைத்தளத்தில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களின் 100க்கும் மேற்ப...

25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தூர் தடுப்பணை ஓடையில் தண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது

சந்தூர் தடுப்பணை, கிருஷ்ணகிரி மாவட்டம் கனமழையால் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தூர் அருகேயுள்ள தடுப்பணை ஓடையில் தண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது. இதை யடுத்து, அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டு மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் இடைவிடாத கனமழை பெய்தது. மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. காட்டாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள தடுப்பணை ஓடையில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் MASTERS GROUP (NEET /JEE) ACADEMY, DHARMAPURI WhatsApp us for Admissions ➜ CLICK HERE பெருக்கெடுத்து ஓடியது. இங்கிருந்து கூச்சானூர் ஏரிக்கு செல்லும் தண்ணீர், அங்கிருந்து பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு செல்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு ஓடையில் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் பூக்கள் தூவியும், ஆடுகள் பலியிட்டும் வழிபட்டனர். மேலும், பாளேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடைக்கோடி ஏரியான கூச்சானூர் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வ...

ஓசூர் - மழையால் வீடு இடிந்ததில் முதியவர் பலி

கிருஷ்கிருஷ்ணகிரி மாவட்டம், மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணப்பா. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வந்தது. விடியற்காலை வரை பெய்த கனமழையால் கிருஷ்ணப்பாவின் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணப்பாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. MASTERS GROUP (NEET / JEE) ACADEMY, DHARMAPURI WhatsApp us For Admissions ➜ Click Here

கிருஷ்ணகிரி - 300 ஆண்டுகள் பழமையான போர்வாள் காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழமையான போர்வாள் காட்சிக்கு வைப்பு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 300 ஆண்டு பழமையான போர்வாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு பொருள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இம்மாதம் 300 ஆண்டு பழமையான போர் வாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் பழங்காலந்தொட்டே ஒரு எல்லைப்புற பகுதியாகும். இது ஒரு முல்லைநிலப் பகுதியாகவும் இருப்பதால், கால்நடைகளுக்கான சண்டைகள் முதல் நாட்டை விரிவுபடுத்த செய்யும் பெரும் போர்கள் வரை நடந்த மாவட்டமாக விளங்குகிறது. இப்போர்களுக்கு வில் - அம்பு முதல், பீரங்கி வரை பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது போர் வாள் ஆகும். வாள் என்பது பொதுவாக இரும்பினால் ஆன கூரிய விளிம்பு கொண்ட நீளமான அலகுடைய குத்துவதற்கும், வெட்டுவதற்கும் பயன்படும் ஆயுதமாகும். இதன் வடிவமானது பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு காலகட்டங்களுக்கும் ஏற்ப வேறுபட்டு காணப்படும். ...

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்!

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்! கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் நோக்கி பயணிகளின் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை தாண்டி தர்மபுரிக்கு சென்றபோது வே.முத்தம்பட்டி மலைப் பாதையில் கற்கள் பெயர்ந்து ரயில் சக்கரத்திலேயே சிக்கி உள்ளது. அதன் காரணமாக ரயில் பாதையில் இருந்து லேசாக தடம் புரண்டது. அதை தொடர்ந்து என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளதாக தெரிவித்தனர். ரயில் தடம் புரண்டதில் நல்லவேளையாக பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. MASTERS GROUP (NEET / JEE) ACADEMY, DHARMAPURI WhatsApp us for Admissions ➜ Click Here இதையடுத்து ரயிலில் வந்த 1250 பயணிகளும் பேருந்தில் ஏற்றப்பட்டு, அதன் பின் தர்மபுரி ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதையை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையான் நோய் தாக்குதலால் நெற்பயிரில் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தற்காக வேளாண்மை அலுவலர்கள் மருந்துகள் தெளிக்க ஆலோசனைகள் வழங்கி, மருந்துகள் தெளித்தும் பலன் அளிக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி வட்டாரத்தில், 4,100 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் நெல்லில் புகையான் தாக்குதல் அதிகரித்தது. மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. விளம்பரம் குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ இங்கே கிளிக் செய்யவும்  இதனால் மேலும் நெற்பயிர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து அகற்றிவிட்டோம். சில இடங்களில் தீயிட்டு அழித் தனர். புகையான் நோயால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்...

கிருஷ்ணகிரி மாவட்டம் - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

கிருஷ்ணகிரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 171 வார்டுகளுக்கு 424 ஓட்டுச்சாவடிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் வரைவு பட்டியல் தயார் நிலையில் உள்ளது.  கிருஷ்ணகிரி:  இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி அன்மையில் வெளியிட்டார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மொத்தம், 171 வார்டுகளுக்கு, 424 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடக்க உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 3 லட்சத்து, 57 ஆயிரத்து, 415 பேர்  வாக்களிக்க உள்ளனர். குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் தொடர்புக்கு...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு ச...

9 மாதங்களில் 728 சிறுமிகள் கர்ப்பம் - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்கள்!'

கிருஷ்ணகிரி: `9 மாதங்களில் 728 சிறுமிகள் கர்ப்பம் - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்கள்!' ஜனவரி 1-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 9 மாதங்களில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 23,347 பேர் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர். இதில், 728 பேர் 18 வயதுக்குட்பட்ட பதின்பருவச் சிறுமிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விளம்பரம் குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் ➜ https://bit.ly/kushishoppingworld ஜனவரி மாதம்-58, பிப்ரவரி-66, மார்ச்-86, ஏப்ரல்-105, மே-101, ஜுன்-102, ஜூலை-96, ஆகஸ்ட்-76, செப்டம்பர் மாதம்-38 சிறுமிகளும் கருத்தரித்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருக்கும் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில்தான் அதிக அளவிலான சிறுமிகள் கருத்தரித்திருப்பதாகவும், ஆர்.டி.ஐ மூலம் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஒன்பது மாதங்களில், காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் 132 சிறுமிகள் கர்ப்பமடைந்திருக்கிறார்கள். ஓசூர் நகர்ப்புறத்தில் 41, ஓசூர் ஒன்றியப் பகுதியில் 28, கிருஷ்ணகிரி நகர்ப்புறத்தில் 9, கிருஷ்ணகிரி ஒன்றியப் பகுதியில் 88 சிறுமிகள் கருத்தரித...